நாட்டில் கடந்த 11 நாட்களில் 12 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று சபாநாயகா் மஹிந்த யாப்பா அபேவர்தன, குமார வெல்கம எம்.பி. ஆகியோருக்கும் இன்றைய தினம் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அங்கொடையில் உள்ள ஐ.டி. எச். வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை சபாநாயகரின் ஊழியர்களில் 3 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், பெப்ரவரி மாதம் இடம்பெறவிருக்கும் நாடாளுமன்ற அமர்வுகள் பிற்போடப்படும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் நாட்களிலும் இந்நிலைமை நீடிக்குமாக இருந்தால் நாடாளுமன்ற அமர்வுகளில் காலதாமதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளாா்.