எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை மேலும் 20 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளர் நாகானந்த கொடித்துவக்கு இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன, பரீட்சைகள் ஆணையாளர், கல்வி அமைச்சின் செயாலாளர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.