மொரிசியஸில் விமானம் ஒன்றின் கழிவறையில் கைவிடப்பட்டிருந்த நிலையில், புதிதாக பிறந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சேர் சீவூசாகர் ராம்கோலாம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டிருந்த விமானத்திலிருந்து கடந்த முதலாம் திகதி, விமானநிலைய ஊழியர்களால் இக்குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மடகாஸ்காரைச் சேர்ந்த 20 வயதான யுவதியொருவர், விமானம் பறந்துகொண்டிருந்த போது இக்குழந்தையை பிரசவித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த யுவதி மொரிசியஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆண் குழந்தை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.