சிறந்த முகாமைத்துவம் ஊடாக மின்சார துண்டிப்பை தவிர்க்கலாம் என்று தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான, ரமேஷ் பத்திரண, மின் துண்டிப்பு குறித்து நேற்று முன்தினம் அமைச்சரவையிலும் கலந்துரையாடப்பட்டதுடன், மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த மின்சார நெருக்கடியை முகாமைத்துவம் செய்யுமாறு ஜனாதிபதியால் கோரிக்கை விடுக்கப்பட்டது என்றும் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (11) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “தற்போதை நிலையில் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி ஒன்று செயழிலந்துள்ளது. அதை சீர்செய்ய10 நாட்கள் செல்லும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
எனவே அந்த மின்பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டதும் மின்சார பிரச்சினை ஏற்படாது என்று தெரிவித்தார்.
சப்புகஸ்கந்த எண்ணைய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தேவையான உராய்வு எண்ணைய் எம்மிடம் உள்ளது. அது முறையாக விநியோகிக்கப்பட்டு வருவதால் எதிர்வரும் 5 நாள்களுக்குள் இதனை முகாமைத்துவம் செய்ய முடியும்.
ஆனாலும் சில வேளைகளில் மின் சிக்கல் எமக்கு ஏற்படலாம். அதனால் தான் அது தொடர்பில் மின்சார சபை மக்களை தெளிவுபடுத்தியுள்ளது என்றார்.
அதனைத் திருத்துவதற்கு 10 நாள்கள் செல்லும் அந்த நாள்களில் ஆங்காங்கே சில வேளைகளில் மின்துண்டிப்பு இடம்பெறலாம். 30 அல்லது 40 நிமிடங்களுக்கு அதற்கு தயாராக இருக்குமாறு கூறும் ஏற்பாடாகவே மின்சார சபையின் பொது முகாமையாளரின் அறிவிப்பு அமைந்துள்ளதே தவிர மின்துண்டிப்பு ஏற்படும் என்று கூறவில்லை என தெரிவித்தார்.
தற்போதைய நிலைமையில், கடந்த இரண்டு வருடங்களில் இலங்கைக்கு வரவேண்டிய வருமானம் 14 பில்லியன் டொலர் இல்லாமல் போயுள்மை பாரிய இழப்பு. அந்த இழப்பை ஈடுசெய்யவே குறித்த கிரமமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.