பாணத்துறையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலாம் தரத்திற்கு மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.