74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட ஒத்திகை நிகழ்வுகள் நாளையிலிருந்து (29) எதிர்வரும் 03ஆம் திகதி வரை நாளாந்தம் காலை 7.00 மணி முதல் பகல் 2.00 மணிவரை இடம்பெறவுள்ளன.
எதிர்வரும் 4ஆம் திகதி 74ஆவது சுதந்திர தின நிகழ்வு காலை 6.00 மணியிலிருந்து கொழும்பு 07இல் உள்ள சுதந்திர சதுர்க்கத்தில் இடம்பெறவுள்ளது.
அதற்கமைய , மேற்குறிப்பிட்ட நேர அட்டவணையின் பிரகாரம் கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்மித்த சில வீதிகளில் போக்குவரத்து தடை விதிக்கப்படவுள்ளது. இத்போது மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸாா் அறிவித்துள்ளனா்.