Our Feeds


Monday, January 3, 2022

SHAHNI RAMEES

இலங்கைக்கு 900 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கவுள்ள இந்தியா

 

900 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா விரைவில் இலங்கைக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை பரிமாற்ற ஒப்பந்தமாகவும், மிகுதி 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை எரிபொருள் கொள்வனவுக்காக கடனாகவும் வழங்கப்படவுள்ளது.

அத்துடன், அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துகளை வாங்குவதற்காக கடனாக மேலும் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பின்னர் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »