நாளை 28ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அதிபர்கள் சங்கக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்கி கடந்த 5ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் அதிபர்களுக்கு புதிய சம்பள முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சாதாரண தகைமைகளுடன் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்படும் உத்தியோகத்தர்கள், அதிபர்களை விட அதிக சம்பளத்தை பெற்றுக்கொள்வதாக அதிபர்கள் சங்க கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.