எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள 2021ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கான அனுமதிப்பத்திரம் இதுவரையில் கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள் , தமது அனுமதிப் பத்திரங்களை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தினூடாக தரவிறக்கம் (Download) செய்துகொள்ள முடியுமென பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளாா்.
அதற்கமைய, www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக தமது அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாா்.