சிலி நாட்டின் சுரங்க நகர் பகுதியான கோபியாப்போவில் இருந்து வடமேற்கே 112 கிலோமீற்றர் தொலைவில் கடற்கரையோர பகுதியில் இன்று (08) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிச்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.