Our Feeds


Saturday, January 8, 2022

ShortNews

PHOTOS: இனவாதத்தை விதைத்ததின் சாபத்தையே அரசாங்கம் இன்று அனுபவித்து வருகிறது - சஜித் கடும் தாக்கு



இனவாதம், இனபேதம் மற்றும் மதவாதத்தை விதைத்தன் சாபத்தையே அரசாங்கம் இன்று அனுபவித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


தேர்தலுக்கு முன்னர் நாட்டு மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்திய அரசாங்கம் தற்போது அதன் மூலமே அழிந்து வருவதாகவும் தெரிவித்தார்.


ஊட்டச் சத்து குறைபாடும், போசாக்கின்மையும் தலைவிரித்தாடும் நாடு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டில் உள்ள குழந்தைகளின் இணைய வழி கல்விக்கு தீர்வை வழங்க முடியாத அரசாங்கத்தால், ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எவ்வாறு தீர்வை வழங்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.


முன்னெப்போதையும் விட இந் நாட்களில் தேசிய ஊட்டச்சத்துக் கொள்கையின் தேவை மிகவும் உணரப்பட்டு வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் குறித்த கொள்கையின் தேவை நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.


எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முற்போக்கு எண்ணக்கருவாக அமைந்த, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய திறமையான இளம் தலைமுறையை உருவாக்கும் நோக்கில், வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணனி உபகரணங்களை வழங்கும் முன்னோடித் திட்டமான 'பிரபஞ்சம்'திட்டத்தின் 8 ஆவது கட்டம் இன்று (08) ஆரம்பமானது.


எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முற்போக்கு எண்ணக்கருவாக அமைந்த  நவீன உலகில் வளமான டிஜிட்டல் எதிர்காலத்திற்காக இந்நாட்டின் இளைய தலைமுறையை, தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற, ஸ்மார்ட்  கணனி பயன்பாட்டில் தேர்ச்சி பெற்ற சமூகமாக கட்டியெழுப்பும் 'பிரபஞ்சம்' முன்னோடித் திட்டத்தின் ஏழாவது கட்டத்தில், ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா (750,000) மதிப்பிலான வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை மன்னார், எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (08) வழங்கி வைத்தார்.இந் நிகழ்வில் பங்கேற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.












Subscribe to this Blog via Email :
Previous
Next Post »