நாட்டை அபிவிருத்தியின் உச்சத்துக்கே கொண்டு செல்வோமென தெரிவித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, தயக்குதடனேயே எரிபொருள் விலையை அதிகரித்தோம். அதில் எமக்கு விருப்பமில்லை எனவும் தெரிவித்தார்.
மாவத்தகம நீர் வழங்கல் திட்டத்தை அண்மையில் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், அரசாங்கம் நிவாரணங்கள் எதனையும் வழங்கவில்லை என எதிர்க்கட்சியினர் கூறிவந்தனர். எனினும் அரசாங்கம் நிவாரணங்களை வழங்கியப் பின்னரும் அதனை விமர்சிக்கிறார்கள். இதனூடாக எதிர்க்கட்சியினரின் கபட எண்ணம் வெளிப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் எதிர்க்கட்சிகள் கிறீஸ் மனிதர்களை உருவாக்கினார்கள். பாராளுமன்றம் தனது அதிகாரத்தை இழந்துள்ளது. ஆளும் தரப்பில் இருந்து எதிர்க்கட்சிக்கு சுமார் 40 பேர் தாவ போகிறார்கள். இப்படி ஒவ்வொரு பிசாசுகளை எதிரணி உருவாக்கிக்கொண்டிருக்கிறது. அந்த கனவு அரண்மனைகளுக்குள் சிலர் அமர்ந்து எம்மீது சேறு பூசுகிறார்கள். நாம் அவர்களை அவ்வளவாக பொருட்படுத்துவதில்லை எனவும் தெரிவித்தார்.