சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்தோக் இராஜினாமா செய்துள்ளார்.
இராணுவத்தினருடன் அதிகாரத்தை பகிர்ந்துகொள்வதற்காக பிரதமர் அப்தல்லா ஹம்தோக் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பிரதமர் ஹம்தோக் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
அவரின் இராஜினாமா மூலம் சூடான் அரசின் அதிகாரம் முழுவதும் இராணுவ வசமாகியுள்ளது