Our Feeds


Friday, January 28, 2022

ShortNews

கல்முனையின் சாய்ந்தமருதில் பெண் கொலை தொடர்பில் வெளியான முக்கிய பரபரப்பு தகவல்கள்!



(பாறுக் ஷிகான், ஹுதா உமர், கனகராசா சரவணன்)


அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. கொலை செய்தார் என சந்தேகிக்கப்படும் நபர், சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் தினமான புதன்கிழமை சைக்கிள் ஒன்றில் குறித்த பெண் வசிக்கும் பகுதிக்குச் சென்றுள்ளார்.

பின்னர் அவர் சம்பவ தினமான வியாழக்கிழமை அதிகாலை அந்தப் பெண்ணின் வீட்டிலிருந்து வெளியேறிச் செல்லும் காட்சிகள் சிசிரிவியில் பதிவாகியுள்ளன.

இதனை அடிப்படையாக கொண்டே தற்போது பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

(முன்னைய செய்தி) அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்துவரும் 85 வயது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் அவர் அணிந்திருந்த தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் தெரிவித்தார்.

சாய்ந்தமருது-15 ஆம் பிரிவு புதுப்பள்ளி வீதியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தாயாரான 85 வயதான பெண்ணே சடலமாக மீட்கப்பட்டார்
குறித்த பெண் வீட்டில் தனியாக வசித்துவரும் நிலையில் சம்பவதினமான நேற்றுக் காலையில் அவரது மகன்களில் ஒருவர் வழமைபோன்று காலை தாயாருக்கு உணவைக் கொண்டு சென்றபோது தாயார் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

இஇந்த விசாரணைகளில் குறித்த பெண் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதுடன் அவரிடம் காணப்பட்ட தங்க நகைகளும் கொள்னையிடப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது. இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »