Our Feeds


Wednesday, January 12, 2022

ShortNews

முழுமையான இயற்கை உர விவசாயத்தை தனிநபரால் செய்ய முடியாது என்பதை ஏற்றுகொள்கிறோம். - சசிந்திர ராஜபக்ஷ

 

இயற்கை உரம் தொடர்பில் அதிகாரிகளுக்குப் போதியளவு தௌிவில்லை என தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ, முழுமையான இயற்கை உர விவசாயத்தை தனிநபரால் செய்ய முடியாது என்பதை ஏற்றுகொள்வதாகவும் தெரிவித்தார். 
 
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நூற்றுக்கு நூறு சதவீதம் இயற்கை உரத்தைப் பயன்படுத்துவதென்பது தனி நபரால் முடியாத காரியம் என்பதை தெரிந்துகொண்டோம். அதனை நாம் ஏற்றுகொள்கிறோம் என்றார்.
 
மேலும் அதிகாரிகளுக்கு குறிப்பாக விவசாயத் திணைக்கள அதிகாரிகளுக்கு இது தொடர்பில் போதியளவு தௌிவுப்படுத்தப்படவில்லை. நேரடியாக இது தொடர்பில் விவசாயிகளுக்கு தௌிப்படுத்தல்களை மேற்கொள்வதிலும் சில குறைப்பாடுகள் ஏற்பட்டுள்ள என்றார். 
 
விவசாயிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகவே விவசாயத்தை மேற்கொண்டனர். இரசாயன உரங்கள் தொடர்பில் இலங்கை கட்டளைகள் நிறுவனத்துக்குப் போதிய விளக்கம் இல்லை எனவும் அவர் கூறினார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »