குவைத் எயார்வேஸ் இலங்கைக்கான போக்குவரத்து நடவடிக்கைகளை திடீரென இடைநிறுத்தியுள்ளதுடன் மற்றுமொரு முக்கிய விமான நிறுவனம் இலங்கைக்கான தனது நடவடிக்கைகளை இடைநிறுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே இயங்கி வந்த குவைத் பயணிகள் சேவை திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளது. தரையிறங்கும் செலவுகள் அதிகரித்துள்ளமை அந்நிய செலாவணி பிரச்சினையின் காரணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் உரிய தாய் நிறுவனங்களுக்கு உரிய நேரத்தில் பணம் செலுத்தாத நிலை போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குவைத் எயாா்வேஸ் ஒப்பீட்டளவில் குறைந்த கட்டண விமான சேவையாக காணாப்படுகிறது. இந்த விமான சேவை மூலம் கணிசமான எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வந்து செல்கின்றனர்.
உள்ளூர் முகவர்களிடமிருந்து செலுத்த வேண்டிய கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்தப்படாமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளளதாக குறிப்பிடப்படுகின்றது.
டொலரைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டு சிரமமே இந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.