Our Feeds


Saturday, January 29, 2022

ShortNews

பிள்ளையின் தாய் போல் வந்து லஞ்சம் கேட்ட அதிபரை கைது செய்த லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரி - நடந்தது என்ன?



லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நேற்று (28) கைது செய்யப்பட்ட பாணந்துறையிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரை பெப்ரவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பாணந்துறை மேலதிக நீதவான் இந்த உத்தரவை இன்று (29) பிறப்பித்துள்ளார்.


150,000 ரூபாவை லஞ்சமாகப் பெற முற்பட்ட போதே அதிபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.


லஞ்ச, ஊழல் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகள், குறித்த அதிபரைக் கைது செய்தனர்.


சந்தேகத்திற்குரிய அதிபர், முதலாம் தரத்துக்கு பிள்ளையொருவரை அனுமதிப்பதற்காக 200,000 ரூபாவை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பின்னர் அந்தத் தொகை 150,000 ரூபாவாக குறைக்கப்பட்டு அதனை பெற்றுக்கொள்ள முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.


அதிபர் லஞ்சம் கோரியதாக, லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் பிள்ளையின் தந்தை செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது. பண்டாரகம பகுதியில் வைத்து அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


லஞ்சம், ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரியொருவர், அதிபர் லஞ்சம் வாங்கும் வேளையில் மாணவரின் தாயாகக் தன்னை அடையாளப்படுத்தி சந்தேக நபரைக் கைது செய்துள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »