பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு சத்திர சிகிச்சை நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
கம்பளை நகரில் நேற்று (27) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“பிரதமருக்கு அவர சத்திர சிகிச்சை ஒன்று நடத்தப்பட்டுள்ளமையினால், அவருக்கு இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ள முடியவில்லை”
என சமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.
இதேவேளை, தனது தந்தைக்கு சத்திர சிகிச்சை நடத்தப்படவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ நேற்று முன்தினம் ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டிருந்த நிலையிலேயே, பிரதமருக்கு சத்திர சிகிச்சை நடத்தப்பட்டுள்ளதாக அவரது சகோதரர் சமல் ராஜபக்ஸ நேற்று கூறியுள்ளார்.