Our Feeds


Monday, January 31, 2022

ShortNews

இப்படியும் நடக்கிறது - போலி கொவிட் தடுப்பூசி அட்டைகளை தயாரித்த செவிலியர்கள்.

 

போலி கொவிட் தடுப்பூசி அட்டைகளை தயாரித்ததற்காக இரண்டு அமெரிக்க செவிலியர்கள் மீது நியூயார்க் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இவர்கள் போலியான கொவிட் தடுப்பூசி அட்டைகளை சுமார் 220 அமெரிக்க டொலர்களுக்கு விற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், இரண்டு தாதியர்களும், அவர்கள் பணியாற்றிய வைத்தியசாலை அதிகாரிகளும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போலி கொவிட் தடுப்பு தடுப்பூசி அட்டைகளை தயாரித்ததாகவும், நிதி மோசடி செய்ததாகவும் பொலிசார் அவர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »