Our Feeds


Saturday, January 1, 2022

ShortNews

அரசாங்கம் பதவி விலக வேண்டும் - இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக



நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாண அனுபவம் உள்ளவர்களை அமைச்சரவைக்கு நியமிக்க வேண்டும். 


பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கத்திற்கு முடியாது என்றால் பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வந்து அரசாங்கம் பதவி விலகி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமான குழுவினரை தெரிவு செய்து கொள்வதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.


அமைச்சரவைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் போது விடயம் தொடர்பான அறிவு மற்றும் அனுபவம் இருப்பவர்களை தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறு தெரிவு செய்யப்படாததினால் இந்த அமைச்சரவை பெய்ல் ஆகியிருக்கிறது. அமைச்சரவை பெய்ல் ஆகியுள்ளதினால் நாடும் பெய்ல் ஆகியுள்ளது. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »