Our Feeds


Wednesday, January 5, 2022

SHAHNI RAMEES

மதுபானம், சிகரட், தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல், பந்தயம், சூதாட்டம், வாகனங்கள் மீது புதிய வரி

 


2021 மற்றும் 2022 வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக, மதுபானம், சிகரெட், தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல், பந்தயம், சூதாட்டம் மற்றும் வாகனங்கள் மீது பல்வேறு விதத்தில் அறவிடப்பட்ட வரிக்கு பதிலாக, விசேட பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரியை அறவிடுவது குறித்து யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த வரி அறவீட்டு முறை தொடர்பிலான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வரியை அறவிடும் முறையை மேம்படுத்தும் வகையிலான வழியை அமைப்பது இந்த புதிய சட்டத்தின் நோக்கமாக காணப்படுகின்றது.

இந்த புதிய சட்டமூலம் ஜனவரி மாதத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »