கடந்த டிசெம்பர் மாதத்தில் இலங்கையின் தங்க கையிருப்பு 206.8 மில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.
நவம்பர் இறுதியில் 382.2 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த தங்க கையிருப்பு டிசெம்பர் மாத இறுதியில் 175.4 மில்லியன் டொலராகக் குறைந்துள்ளது.
இதேவேளை, நவம்பரில் 1.588 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த மொத்த கையிருப்பு 3.137 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என்றும் மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.