க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு நாளை நள்ளிரவிலிருந்து பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சை 2021 மார்ச் 07 முதல் மார்ச் 05 வரை நடைபெறவுள்ளது.
அதன்படி இன்று நள்ளிரவுக்குப் பின்னர் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
குறித்த தடை விதி முறைகளை மீறி எவரேனும் செயற்படுவாராயின் அது பற்றி அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ, பொலிஸ் தலைமையகத்திற்கோ, பரீட்சைகள் திணைக்களத்திற்கோ அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.எல்.டி.தர்மசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.