சீனக்குடாவில் அமைந்துள்ள எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு விற்பனை செய்யும் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தும் எதிர்ப்பு ஆர்பாட்டம் ஐக்கிய மக்கள் சக்தியின் ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியம் சார்பாக நேற்று (09) பிற்பகல் சீனக்குடாவில் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் இம்ரான் மஹ்ரூப் MP தலைமையில் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அசோக அபேசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர்களான கபில கழுப்பான, சரத் லோறன்ஸ், சேருவில தொகுதி அமைப்பாளர் அருண சிரிசேன, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உப தாவிசாளர் கௌரவ நவ்பர், தொழிற்சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.




