Our Feeds


Tuesday, February 1, 2022

ShortNews

சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் வழங்குபவருக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் – பொலிஸ்

 



பாணந்துறை ஆதார மருத்துவனைக்கு முன்பாக அம்பியூலன்ஸ் சாரதியை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த இருவரை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, சந்தேக நபர்கள் இருவரின் புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிடுவதற்கு பொலிஸ் ஊடகப்பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு சந்தேக நபர்கள் தொடர்பில் சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்காக பொலிஸ் ஊடகப்பிரிவு விசேட இலக்கங்களை வழங்கியுள்ளது.


பிரதிப் பொலிஸ் மா அதிபர், மேல் மாகாண குற்றப் பிரிவு – 071-8592686
பணிப்பாளர், களுத்துறை குற்றப் பிரிவு – 071-8592745





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »