Our Feeds


Wednesday, February 9, 2022

SHAHNI RAMEES

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று 14 மணித்தியால நீர்வெட்டு

 

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (09) மாலை 4 மணி முதல் 14 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் ஏக்கல, கொட்டுகொட, உதம்மிட்ட, ரஜ மாவத்தையின் துடெல்ல முதல் 20 மைல் கல் வரையான பகுதி, வஹட்டியகம, தெலத்துர, கட்டுநாயக்க, சீதுவ, உடுகம்பொல மற்றும் மினுவாங்கொடை பகுதி, கட்டுநாயக்க விமானப்படை தளம், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் கட்டான தெற்கு ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

ஜா-எல வீதியின் நீர்க்குழாய் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »