Our Feeds


Sunday, February 13, 2022

ShortNews

கம்பன்பிலவின் இல்லத்துக்கு, அரச செலவில் 20 லட்சம் ரூபா பெறுமதியான ஜெனரேட்டர்


அமைச்சர் உதய கம்மன்பிலவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், 20 கேவிஏ (KVA) டீசல் ஜெனரேட்டர் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு எரிசக்தி அமைச்சு அண்மையில் அனுமதி வழங்கியதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய களஞ்சியப்படுத்தல் முனையத்தின் (Ceylon Petroleum Storage Terminal Limited) ஆவணங்களின் படி, மேற்படி ஜெனரேட்டருக்கு 1.96 மில்லியன் ரூபா மற்றும் வரிகள் செலவாகும் எனத் தெரியவருகிறது. இதற்கான தொகை அமைச்சிலிருந்து திருப்பிச் செலுத்தப்படும்.

மேற்படி ஜெனரேட்டரைக் கொள்வனவு செய்து, எரிசக்தி அமைச்சரின் கொழும்பு – 07இல் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் நிறுவி, அதனைப் பராமரிக்குமாறு, எரிசக்தி அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக, இலங்கை பெற்றோலிய களஞ்சியப்படுத்தல் முனையத்தின் சபை ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது.

இதனடிப்படையில், மின் தடையயை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா எனும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »