Our Feeds


Tuesday, February 15, 2022

ShortNews

ஒருவருக்கு 3 தேங்காய்களே வாங்கலாம் - வருகிறது புதிய கட்டுப்பாடு!



சதொச விற்பனை நிலையங்களில் அரிசி, தேங்காய் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை மாத்திரம் கொள்வனவு செய்ய முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் குணவர்தன, சதொச விற்பனை நிலையங்களில் இவ்வாறான பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால், மக்கள் அவற்றை தவறாக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக ஒருவர் ஒரே நேரத்தில் கொள்வனவு செய்யக்கூடிய தேங்காய்களின் எண்ணிக்கை மூன்றாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.

மஞ்சள் மற்றும் தேங்காய் ஆகியவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும், ஆனால் குறிப்பிட்ட நபர்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் கொள்முதல் செய்ததாக கூறப்படுவதால், இவ்வாறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு, ஏனைய அனைத்து பொருட்களும் சந்தையை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால், சதொச விற்பனை நிலையங்களில் அனைத்து பொருட்களையும் கொள்வனவு செய்யலாமென வர்த்தக அமைச்சர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »