Our Feeds


Thursday, February 3, 2022

ShortNews

அதிர்ச்சித் தகவல் - புற்று நோயினால் இலங்கையில் ஒரு நாளில் 40 பேர் உயிரிழப்பு



புற்றுநோயால் நாட்டில் நாளாந்தம் சுமார் 40 பேர் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.


கொழும்பில் நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய – தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் இஷானி பெனாண்டோ இதனைத் தெரிவித்தார்.


அத்துடன், 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் புற்றுநோயால் 31,848 பேர் உயிரிழந்துள்ளனர்.


உலக புற்றுநோய் தினம் நாளை (04) அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »