Our Feeds


Friday, February 11, 2022

SHAHNI RAMEES

உயிரிழந்த யாசகரிடம் இருந்து ரூ. 400,000 பணம் மீட்பு!

 

நகரமொன்றில் யாசகம் எடுத்து வாழ்ந்து வந்த யாசகர் ஒருவர் நேற்று (10) திடீரென உயிரிழந்துள்ளதுடன் அவரது கால்சட்டைப் பையில் இருந்து பெருந்தொகை பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் நபர் ஹக்மன பிரதேசத்தில் வசிக்கும் யாசகர்  ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அவரது கால்சட்டை பைகளில் கிட்டத்தட்ட 400,000 ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 69 வயதான ஹக்மான கொங்கல. தி. விமலதாச என்ற பிச்சைக்காரனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் தான் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் உள்ள மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

தனியாக வசித்து வந்த இவர், இதற்கு முன்பு ஹெவிசி இசைக்கருவி வாசிப்பவராக பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறந்தவருக்கு உறவினர்கள் யாரும் இருப்பதாக தகவல் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »