முன்னாள் ஊவா மாகாண முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
பசறை பிரதேச சபை உறுப்பினர் கண்மணி சிவனேசன், பசறை காவல்துறையில் நேற்று (06) இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
கோணக்கலை தோட்டத்தில், கடந்த 3ம் திகதி ஒரு லட்சம் கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இடம்பெற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தசநாயக்கவினால் தாம் தாக்கப்பட்டதாக கண்மணி சிவனேசன் அந்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பசறை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.