இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று தொடருந்து நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
எல்லைத் தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்ட மீனவர்களை படகுகளுடன் விடுவிக்குமாறு இராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முன்தினம் முதல் தொடர் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளனர்.
இந்தநிலையில், இராமேஸ்வரத்தில் உள்ள தொடருந்து நிலைய வளாகத்தில் இன்று கூடிய மீனவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து அங்கு, அதிகளவான காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இலங்கை மற்றும் இந்திய கடற்றொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சினை சம்பந்தமாக ஆராயும் விசேட விழுதுகள் நிகழ்ச்சி நாளை காலை 8மணிக்கு சூரியனில் ஒலிபரப்பாகவுள்ளது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா கலந்துக்கொள்ளும் இந்த நிகழ்ச்சியினை சூரியனின் செய்தி முகாமையாளர் பரமேஸ்வரன் விக்னேஸ்வரன் நெறியாள்கை செய்தார்.
இந்த காணொளியினை சூரியன் யுடியுப் தளத்தில் நாளை இரவு 7 மணிக்கு நீங்கள் காணலாம்.