Our Feeds


Tuesday, February 1, 2022

ShortNews

பெசில் ராஜபக்ஷ மற்றுமொரு வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை



2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில், திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 2 கோடியே 94 இலட்சம் ரூபா நிதியை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் அந்த திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


அப்போதைய, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சின்னம் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை அச்சிட்ட குற்றச்சாட்டிலேயே இவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


இந்த வழக்கு மீதான விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »