கனேடிய தலைநகர் ஒட்டாவாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. லொறி சாரதிகளின் ஆர்ப்பாட்டங்களே இதற்குக் காரணம்.
லொறி சாரதிகளுக்கு கொவிட் தடுப்பூசி கட்டாயமாக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தலைநகர் ஒட்டாவாவில் ஒரு வாரத்துக்கு மேலாக லொறி சாரதிகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஒட்டாவா மேயர் ஜிம் வட்சன் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
பொலிஸாரின் எண்ணிக்கையைவிட ஆர்ப்பாட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நகரம் முற்றிலும் கட்டுப்பாட்டை இழந்துள்ளது என மேயர் ஜிம் வட்சன் கூறியுள்ளார்.
ஒட்டாவா நகர மக்களின் பாதுகாப்புக்கு லொறி சாரதிகளின் ஆர்ப்பாட்டங்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.