குடிநீர் போத்தல்களின் அதிகபட்ச சில்லறை விலையை அரசாங்கம் கடந்த வாரம் நீக்கியதை அடுத்து, குடிநீர் போத்தல்களின் புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இலங்கை குடிநீர் போத்தல் ஒழுங்கமைப்பு வெளியிட்டுள்ள புதிய தண்ணீர் போத்தல்களின் விலைகள் வருமாறு,
500 மில்லி லீற்றர் போத்தல் 50 ரூபாவாகவும், 1 லீற்றர் போத்தலின் விலை 70 ரூபாவாகவும், 1.5 லீற்றர் குடிநீர் போத்தலின் விலை 90 ரூபாவாகவும், 5 லீற்றர் குடிநீர் போத்தலின் விலை 200 ரூபாவாகவும், 7 லீற்றர் குடிநீர் போத்தலின் விலை 240 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.