Our Feeds


Tuesday, February 8, 2022

ShortNews

மின்தடை ஏற்பட காரணம் இதுதான் - வௌியான புதிய தகவல்!



கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட திடீர் மின்தடைதான் சமீபத்திய மின்வெட்டுக்கு முக்கியக் காரணம் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


குறித்த திடீர் மின் தடை காரணமாக நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் இரண்டு மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த திடீர் மின்தடை நாசகார வேலை என தற்போது தகவல் வெளியாகியுள்ளதாக ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு (07) ரிவி தெரணவில் ஒளிபரப்பான ´360´ நேரடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அடுத்து குறித்த சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ரத்நாயக்க இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, மின்வெட்டு இன்றி இன்றைய தினம் மின்சாரத்தை வழங்க முடியும் என ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »