வெல்லம்பிட்டி – சாலமுல்ல – கமகேவத்த பகுதியில் நேற்று (31) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு மேட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர்கள், துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.