Our Feeds


Sunday, February 13, 2022

SHAHNI RAMEES

இலங்கை வரும் இந்தியர்களுக்கு புதிய விசா நடைமுறை அறிமுகம்!

 

இலங்கை வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு உள்வருகை விசாவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்து, விசாவை பெற்றுக்கொள்ளும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்த இலங்கை சுற்றுலா மேம்பாட்டுஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை சுற்றுலாத்துறை வீழ்ச்சி கண்ட நிலையில், சுற்றுலா பயணிகளை ஊக்கவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கு வருகை தந்ததன் பின்னர் உள் வருகை வசாவை (ON ARRIVAL VISA) பெற்றுக்கொள்ளும் நடைமுநை இதற்கு முன்னா் ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது இந்தியர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஆணையகத்தின் தலைவர் கிமாலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளாா்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »