குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் நேற்று கைது செய்யப்பட்ட சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கமகேவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தினால் இன்று பிணை வழங்கப்பட்ட நிலையில் ஷெஹான் மாலக கமகே விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஷெஹான் மாலக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டன.
அவ்விசாரணையில் அவரது நீண்ட வாக்கு மூலம் பெறப்பட்டிருந்தது. அந்த விசாரணைக் கோவை சட்ட மா அதிபருக்கு அனுப்பட்டு ஆலோசனை கோரப்பட்டது.
அது தொடர்பில் ஆலோசனை வழங்கியுள்ள சட்ட மா அதிபர், தண்டனை சட்டக் கோவையின் கீழ் குற்றம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவதால் அவரைக் கைது செய்யுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதன்படியே அவர் நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உளவுத் துறையின் பங்களிப்பு இருப்பதாக ஷெஹான் மாலக பொது வெளியில் கருத்து வெளியிட்ட நிலையில், அதனை மையப்படுத்தி அவர் சி.ஐ.டி. விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.