Our Feeds


Sunday, February 13, 2022

ShortNews

PHOTOS: 'நான் இன்னும் உயிா்ப்புடன் இருக்கின்றேன்' | அஷ்ரப் ஷிஹாப்தீன் மொழிபெயர்த்த, மேற்குலகின் இஸ்லாமிய பெண் ஆளுமைகளின் முக்கிய உரைகளின் மொழிபெயர்ப்பு நூல் கொழும்பில் வெளியீடு


 

(அஷ்ரப் ஏ சமத்)


பல்துறை ஆளுமை கொண்டவரும் எழுத்தாளரும் ஒளி , ஒலிபரப்பாளருமான அஷ்ரப் சிஹாப்தீன் மொழிபெயா்த்த ”நான் இன்னும் உயிா்ப்புடன் இருக்கின்றேன்” (பெண் ஆளுமைகளின் உரைகள்) நுால் வெளியீட்டு விழா (12.02.2022) சனிக்கிழமை கொழும்பு அல்ஹிதாய வித்தியாலய கூட்ட மண்டபத்தில், தலைமை இ.ஒ.கூ.தா முஸ்லிம் சேவை உதவிப் பணிப்பாளா் பாத்திமா றினுஸியா. தலைமையில் நடைபெற்றது.


பிரதம அதிதியாக முன்னாள் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சரும் சிங்கப்பூர் இலங்கைத் துாதுவராகவும் கடமையாற்றிய பேரியல் அஷ்ரப் கலந்து கொண்டாா்கள். நுாலின் முதற்பிரதி இம்ரான் நைநாா் பெற்றுக் கொண்டாா்.


வரவேற்புரையை கவிஞா் பாத்திமா ஸிமாரா, சட்டத்தரணி பாத்திமா நுால் பற்றிய விமா்சன உரையை நுஸ்ரா சருக், மௌலவியா நஸ்லின் ரசீத், மௌலவியா அகீலா பத்தீன் ஆகியோறும் நிகழ்த்தினாா்கள் இவ் விழாவில் முஸ்லிம் பெண் சட்டத்தரணிகள், எழுத்தாளா்கள் மௌலாவியா, பெண் கவிஞா்கள், ஊடகவியலாளா்கள் என பலரும் கலந்து கொண்டு நுாலின் பிரதிகளையும் பிரதம அதிதியிடமிருந்து பெற்றுக்கொண்டனா் முகநுால் நண்பா் வட்டம் அஷ்ரப் சிகாப்தீனுக்கு நினைவுச் சின்னமொன்றையும் வழங்கி கௌரவித்தனா்.


இந் நுால் பற்றி ---


மேற்குலகில் வாழும் இஸ்லாமிய செயற்பாட்டாளா்களான பெண் ஆளுமைகள் பதின்மரின் கருத்தாழும் மிக்க உரைகளின் மொழிபெயா்ப்பான இந் நுால் மிகப் பொருத்தமான தலைப்புக்களில் நம் கவனயீர்ப்புக்குரிய காத்திரமான கருத்துக்களை கொண்டனவாயும் சிந்திக்கவும் செயல்படவும் துாண்டுவனவாயும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


அநீதிகளையும் அராஜகங்களையும் கண்டு அஞ்சித் துவண்டு போகாது முடங்கி விடாது அவற்றைத் தட்டிக் கேட்டு அவற்றுக் கெதிராக குரல் கொடுப்பதோடு அவற்றை களையவும் முயற்சி செய்வது நமது கடமை என்ற செய்தியையும் இந்நுாலில் உள்ளன.


இஸ்லாமிய நாடுகளின் பெண்களின் திறமையான உரைகள் இந் நுாலில் தமிழ் மொழி மாற்றம் செய்யப்பட்டு அடங்கியுள்ளன.














Subscribe to this Blog via Email :
Previous
Next Post »