அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் பள்ளிவாயல் ஒன்றில் பல நபர்கள் இணைந்து இருவரை தாக்கிய சம்பவம் வீடியோவாக வெளியாகி சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
இதனை Live @ 8 தொலைகாட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட இருவர் தண்டனை வழங்க மௌலவி ஒருவரிடம் அழைத்து செல்லப்பட்ட நிலையில் பள்ளிவாசலுக்குள் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர்.
பிரதேச நபர்களின் தாக்குதலின் பின்னர் அந்த நபர்கள் மௌலவி ஒருவரால் பிரம்பு ஒன்றினால் அடிக்கப் படும் சம்பவமும் குறிப்பிட்ட வீடியோவில் பதிவாகி உள்ளது.
இவ்வாறு தாக்கப்பட்ட நபர்களில் ஒருவர் அறுகம்பை பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் ஆவார். இரவு வேளையில் வீதியில் உலாவிக் கொண்டிருந்த இருவர் பிடிக்கப்பட்டு மௌலவியிடம் அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர்.
அதன் பின்னரே அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர் என செய்திகள் வெளியாகி உள்ளது.