Our Feeds


Saturday, February 12, 2022

SHAHNI RAMEES

இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சார மோட்டார் சைக்கிள் (VIDEO/PHOTO)

 

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக, மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிள் ஒன்று உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.

மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் சசிரங்க டி சில்வாவினால், இந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 4 மணிநேரம் மின்சாரத்தில் சார்ஜ் செய்யக்கூடிய வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கிளின் மூலம், 120 கிலோமீற்றர் வரை பயணிக்க முடியும் என சசிரங்க டி சில்வா தெரிவிக்கின்றார்.

World Express Services
மணிக்கு 110 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக்கூடிய வகையில், இந்த மோட்டார் சைக்கிள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளை 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்தைக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார். 


 






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »