Our Feeds


Monday, March 14, 2022

ShortNews

பேஸ்புக் களியாட்டத்தில் போதைப் பொருட்களுடன் 39 இளைஞர்கள் கைது!



புத்தளம் – வென்னப்புவ பகுதியில் பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்டத்தில் போதைப்பொருள் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தில் 39 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


வென்னபுவ பொலிஸ் பிரிவில் வயிக்கால பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் இவ்வாறு போதைப்பொருள் பாவனையுடன் களியாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமையவே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் 20 – 30 வயதுக்கு இடைப்பட்ட மட்டக்குளி, கனேமுல்ல, நீர்கொழும்பு, அநுராதபுரம், வத்தளை மற்றும் மீரிகம உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »