எரிபொருட்களின் விலை உயர்வை எதிர்கொள்ளும் வகையில் மின் கட்டணத்தை அதிகரிக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, விலை அதிகரிப்பு வீதங்கள் தொடர்பில் தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
எரிபொருள் விலை பாரிய அதிகரிப்பு, உற்பத்திச் செலவு அதிகரிப்பு, மின்சார அலகு ஒன்றின் இழப்பு அதிகரிப்பு, ஒன்பது வருடங்களாக மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாமை போன்றவற்றைக் கருத்திற்கொண்டு மின் கட்டணத்தை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
