எம்பிலிபிட்டிய-செவனகல-நெலும்வெவ பிரதேசத்தில் உயிருடன் இருக்கும் போது மரணச் சான்றிதழைப் பெற்ற நபர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
48 வயதான டபிள்யூ.இ. சரத் என்ற நபருக்கு மரணச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கார் விபத்தில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு மரணம் ஏற்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.