Our Feeds


Wednesday, March 9, 2022

ShortTalk

ரஷ்ய எண்ணெய் இறக்குமதிகளைத் தடை செய்த ஜோ பைடன்.

 

ரஷ்ய எண்ணெய், ஏனைய சக்தி இறக்குமதிகள் மீதான தடையொன்றை ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று அறிவித்துள்ளார். உக்ரேனுக்குள் ரஷ்யா ஊடுருவியதற்கு பதிலடியாகவே இந்த அறிவிப்பை ஜனாதிபதி பைடன் விடுத்துள்ளார்.

இதேவேளை, இந்நகர்வு மூலம் ஐக்கிய அமெரிக்க சக்தி விலைகள் அதிகரிக்கும் என்பதை ஜனாதிபதி பைடன் ஏற்றுக் கொண்டுள்ளார்.

சராசரியாக கடந்தாண்டு எட்டு சதவீதமான ஐக்கிய அமெரிக்க திரவ எரிபொருள் இறக்குமதிகளை ரஷ்யாவிலிருந்து ஐக்கிய அமெரிக்கா மேற்கொள்கின்றது.

இந்நிலையில், மசகெண்ணெய் பரலொன்றின் விலையானது 130 ஐக்கிய அமெரிக்க டொலர்களாக உயர்ந்திருந்தது.

இதேவேளை, ஜனாதிபதி பைடனின் அறிவிப்புக்கு முன்பதாக இவ்வாண்டு இறுதியுடன் ரஷ்ய எண்ணெய் மற்றும் எண்ணெய்த் தயாரிப்பு இறக்குமதிகளை நிறுத்துவோம் என பிரித்தானியா அறிவித்திருந்தது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »