Our Feeds


Saturday, March 12, 2022

ShortTalk

ரஷ்யாவில் இன்ஸ்டாகிராம் சேவை முடக்கம் - புட்டின் அதிரடி



இன்ஸ்டாகிராம் சேவையை முடக்குவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.


உக்ரைனில் தொடர்ந்து 17ஆவது நாளாக ரஷ்யப் படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. உக்ரைனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய ரஷ்யா தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் ரஷ்ய இராணுவத்தினருக்கு எதிராக பதிவு செய்யப்படும் வன்முறைக் கருத்துக்களை அனுமதித்த இன்ஸ்டாகிராம் செயலியின் சேவையை முடக்குவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

மார்ச் 14 ஆம் திகதி முதல் ரஷ்யாவின் சில பகுதிகளில் இந்த முடக்கம் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் செயலியின் முக்கிய நிர்வாகியான ஆடம் மோசரி,’ ரஷ்யாவில் 8 கோடிக்கும் அதிகமானோர் இன்ஸ்டாவைப் பயன்படுத்தி வரும் நிலையில், இந்த முடக்கம் தவறானது’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ரஷ்யா பேஸ்புக் சேவையையும் நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »