Our Feeds


Saturday, March 12, 2022

ShortTalk

வாகன இறக்குமதிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி - மத்திய வங்கி தீர்மானம்



வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.


டொலரில் வரி செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதித்தால், குறிப்பிட்ட சில நபர்களின் ஊடாக நாட்டுக்கு விரைவில் டொலர் கிடைக்குமெனவும், இதனால் தற்போதைய டொலர் பிரச்சனை தீர்ந்துவிடும் என்றும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.


இதன்மூலம் வெளிநாட்டில் தொழில்புரிபவர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென இலங்கை மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


எவ்வாறாயினும், நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு வாகனங்களின் சாதாரண இறக்குமதியை மேலும் ஊக்கப்படுத்த வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.


இதேவேளை, ஆடம்பரப் பொருட்களின் இறக்குமதியை நிறுத்துவதற்குப் பதிலாக, அவற்றிற்கு அதிக வரிகளை அறவிடுவதே மிகவும் புத்திசாலித்தனமானது எனவும் இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »