Our Feeds


Thursday, April 14, 2022

ShortTalk

21 விமானங்களை நீண்ட கால குத்தகைக்கு கோரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

 

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அடுத்த மூன்று வருடங்களுக்குள் தனது விமானங்களின் எண்ணிக்கையை 35 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

21 விமானங்களுக்காக நீண்ட கால குத்தகைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலுக்கு முன்னர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 27 விமானங்களைக் கொண்டிருந்தது, அது தற்போது 24 ஆகக் குறைந்துள்ளது.

அத்துடன், குத்தகைக் காலம் நிறைவடைந்து வரும் விமானங்களுக்குப் பதிலாக புதிய விமானங்களை பெற்றுக் கொள்ள அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஏ330-200 அல்லது ஏ330-300 ரகங்களைச் சார்ந்த 10 எயார்பஸ்கள் மற்றும் ஏ320 அல்லது ஏ321 ரகங்களைச் சார்ந்த 11 எயார்பஸ்களை 6 ஆண்டுகள் வரை குத்தகைக்கு எடுக்க விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »