(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகளில் எதிர்வரும் நாட்களில் மாற்றம் ஏற்படுத்தப்படும். கட்சியின் முக்கிய பொறுப்பை ஏற்குமாறு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷவுக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ள்தாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டில் தற்போது தோற்றம் பெற்றுள்ள அரசியல் ஸ்திரமற்ற தன்மைக்கு இன்னும் ஓரிரு நாட்களில் தீர்வு பெற்றுக் கொள்ளப்படும். அரசாங்கத்தை பலவீனப்படுத்த அரசாங்கத்துக்குள் ஒரு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி தற்காலிகமாகவே வெற்றி பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
